Sunday, 9 December 2018
Thursday, 6 December 2018
Wednesday, 21 November 2018
World hand wash day
Hand wash awareness programme:
Hand wash awareness programme video is presented in our school.students actively and eagerly watched the video.before presented the video they gave a speech about hand wash by training sir.
Tuesday, 30 October 2018
வானியல் தொலைவு :
வானியல் அலகு:
புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ஆகும்.
1 வானியல் அலகு=149.6மில்லியன் கிலோமீட்டர்
ஒளி ஆண்டு:
வெற்றிடத்தில் ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவு ஆகும்.
1 ஒளி ஆண்டு=9.46×10^15 மீ
தனிஊசல்:
தனிஊசல் அமைப்பானது கலிலியோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
திரவங்களை அளவிடுதல் :
திரவங்கனை அளவிடுதல் :
பிப்பெட் :
குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை அளந்து எடுக்கப் பயன்படுகிறது.
பருமன் :
பருமன் :
சிறிய அளவுடைய பொருட்கள் குறைந்த பருமனையும்,பெரிய அளவுடைய பொருட்கள் அதிக பருமனையும் கொண்டிருக்கும்.
பருமன் =அடிப்பரப்பு× உயரம்
அளவீட்டியல்:
வழி அளவுகள் :
அடிப்படை அளவுகளான நீளம்,நிறை,காலம் ஆகியவற்றின் பெருக்கல் அல்லது வகுத்தல் மூலம் பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் ஆகும்.
பரப்பளவு :
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் பரப்பளவு ஆகும்.
பரப்பளவு =நீளம் × அகலம்
அணுவின் எலக்ட்ரான் அமைப்பு:
எலக்ட்ரான் அமைப்பு:
உட்கருவைச் சுற்றியுள்ள ஒவ்வொரு ஆர்பிட்டிலும் எலக்ட்ரான்கள் அவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ள ஒழுங்கமைவை குறிப்பிடுவதே எலக்ட்ரான் அமைப்பு எனப்படும்.
ஐசோடோப்பு,ஐசோபார்,ஐசோடோன்
ஐசோடோப்பு:
ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்பு ஆகும்.
நியூக்ளியான்:
நியூக்ளியான்:
அணுவின் அடிப்படை துகளான புரோட்டடானும் நியூட்ரானும் இணைந்து நியூக்ளியான்கள் எனப்படும்.
போர் அணுமாதிரி
போர் அணுமாதிரி:
அணுவின் நிலைப்புத்தன்மையை நியாயப்படுத்துவதற்காக ரூதர்ஃபோர்டின் அணுமாதிரியில் சில திருத்தம் மேற்க்கொண்டு நீல்ஸ் போர் புதிய அணுமாதிரி கொள்கையை வெளியிட்டார்.
அணுக்கரு கண்டுபிடிப்பு:
தாம்சன் மாதிரி:
அணுவின் உள்ளே நேர் மின்னோட்ட துகளானது எல்லா பகுதிகளிலும் ஒரே அழுத்தத்துடன் செயல்படும்.அணுவை சீரற்ற நகரும் எலக்ட்ரான்கள் கொண்ட ஒரு சீரான நகரும் நேர்மின் சுமையாக கொண்டால் அந்த துகளானது அணுவின் அடுத்தப் பகுதியிலிருந்து எந்வித விலக்கமும் அடையாமல் வெளியே வரும்.
அணு அமைப்பு:
பெருக்கல் விகித விதி:
A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் போது A-ன் நிறையானது B-ன் நிறையொடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும். பெருக்கல் விகித விதியானது ஜான் டால்டன் என்பவரால் முன்மொழியப்பட்டது.
Monday, 29 October 2018
மெய்பிம்பம்,மாயபிம்பம்
மெய்பிம்பம்:
பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால் அதனால் உருவாகும் பிம்பம் மெய்பிம்பம் ஆகும்.
மாயபிம்பம்:
பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குபின் சந்திக்காமல் செல்லும் போது அதனால் உருவாகும் பிம்பம் மாய பிம்பம்.
முழு அக எதிரொளிப்பு:
முழு அக எதிரொளிப்பிற்கான நிபந்தனைகள்:
* ஒளியானது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு செல்ல வேண்டும்.
* அடர்மிகு ஊடகத்தில் படுகோணத்தின் மதிப்பு மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
இயற்கையில் காணப்படும் முழு அக எதிரொளிப்பு:
* கானல் நீர்
* வைரம்
* விண்மீண்கள்
ஒளியின் திசைவேகம் :
ஓலே ரோமர் என்ற டேனிய வானியலாளர் 1665 ல் வியாழன் கோளின் பன்னிரண்டு நிலவுகளில் ஒன்றை அவதானித்து அதன் மூலம் ஒளியின் திசைவேகத்தினை கணக்கிட்டார்.
ஒளி விலகலுக்கான காரணங்கள்:
ஊடகத்தின் தன்மையை பொறுத்து ஒளியின் திசைவேகம் மாறுபடுகிறது. அடர் குறை ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாகவும் அடர்மிகு ஊடகத்தில் திசைவேகம் குறைவாகவும் இருக்கும்.
குழி ஆடி:
குழி ஆடி:
சில வகை கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள்பக்கமாக வளைந்திருக்கும்.இவை குழி ஆடி எனப்படும்.
வளைவு ஆடிகள்:
வளைவு ஆடிகள்:
பளபளப்பான கரண்டி ஒன்றின் வளைந்த பரப்பு கூட வளைவு ஆடி ஆகும்.
கோளக ஆடி:
எதிரொளிக்கும் பகுதி கோள வடிவில் காணப்பட்டால் அது கோளக ஆடி எனப்படும்.
வளைவு மையம் :
கோளக ஆடி எந்த உள்ளீடற்ற கோளத்தின் ஒரு பகுதியாக அமைகிறதோ அதுவே வளைவு மையம் ஆகும்.
ஆடி மையம் :
கோளக ஆடியின் வடிவியல் மையம் ஆகும்.
முதன்மை அச்சு:
ஆடி மையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் செங்குத்துக் கோடு ஆகும்.
ஒளி:
ஒளி:
ஒளி என்பது ஆற்றலின் வடிவம் ஆகும்.ஒளியின் பண்பையும்,அதன் பயன்பாடுகளையும் பற்றி அறியும் இயற்பியல் பிரிவு ஒளியியல் எனப்படும்.
எதிரொளிப்பு விதி:
படுகதிர்,எதிரொளிப்புக்கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைகின்றன. இதையே எதிரொளிப்பு விதிகள் என்பர்.
இடவல மாற்றம்:
பக்கவாட்டில் ஏற்படும் மாற்றம் இடவல மாற்றம் எனப்படும்.








