Tuesday 30 October 2018

வானியல் தொலைவு :

வானியல் அலகு:
        புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ஆகும்.
     1 வானியல் அலகு=149.6மில்லியன் கிலோமீட்டர்

ஒளி ஆண்டு:
         வெற்றிடத்தில் ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தொலைவு ஆகும்.
    1 ஒளி ஆண்டு=9.46×10^15 மீ

தனிஊசல்:

தனிஊசல் அமைப்பானது கலிலியோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கெட்டியான சிறிய உலோகக் குண்டினை மீட்சியற்ற நூலினால் கட்டித்தொங்க விடப்பட்ட அமைப்பே தனிஊசல் ஆகும்.

அடர்த்தி:

அடர்த்தி:
      ஓரலகு பருமன் கொண்ட பொருளின் நிறை அதன் அடர்த்தி எனப்படும்.
     அடர்த்தி=நிறை/பருமன்

திரவங்களை அளவிடுதல் :

திரவங்கனை அளவிடுதல் :
பிப்பெட் :
         குறிப்பிட்ட கன அளவுள்ள திரவத்தை அளந்து எடுக்கப் பயன்படுகிறது.

அளவுசாடி:
திரவத்தின் கனஅளவை அளவிடப் பயன்படுகிறது.
பியூரெட்:
தேவையான குறைந்த கனஅளவுள்ள திரவத்தை வெளியேற்றப் பயன்படுகிறது.
அளவுக்குடுவை:
குறிப்பிட்ட கனஅளவுள்ள திரவத்தை வைத்துக் கொள்ள பயன்படுகிறது.

பருமன் :

பருமன் :
     சிறிய அளவுடைய பொருட்கள் குறைந்த பருமனையும்,பெரிய அளவுடைய பொருட்கள்  அதிக பருமனையும் கொண்டிருக்கும்.
    பருமன் =அடிப்பரப்பு× உயரம்
    

அளவீட்டியல்:

வழி அளவுகள் :
      அடிப்படை அளவுகளான நீளம்,நிறை,காலம் ஆகியவற்றின் பெருக்கல் அல்லது வகுத்தல் மூலம் பெறப்படும்  அளவுகள் வழி அளவுகள் ஆகும்.

பரப்பளவு :
       பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் பரப்பளவு  ஆகும்.
     பரப்பளவு =நீளம் × அகலம்

அணுவின் எலக்ட்ரான் அமைப்பு:

எலக்ட்ரான்  அமைப்பு:
         உட்கருவைச் சுற்றியுள்ள ஒவ்வொரு ஆர்பிட்டிலும்  எலக்ட்ரான்கள் அவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ள ஒழுங்கமைவை குறிப்பிடுவதே எலக்ட்ரான் அமைப்பு எனப்படும்.

குவாண்டம் எண்கள்:
 அணுவின் உள்ளிருக்கும் அணு ஆர்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டை  குறிக்கும் எண்கள் குவாண்டம் எண்கள் எனப்படும்.

ஐசோடோப்பு,ஐசோபார்,ஐசோடோன்

ஐசோடோப்பு:
        ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்பு ஆகும்.

ஐசோபார்கள்:
ஒத்த நிறை எண்களையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு  தனிமத்தின் அணுக்கள் ஐசோபார்கள் ஆகும்.
ஐசோடோன்:
ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஆகும்.

நியூக்ளியான்:

நியூக்ளியான்:
         அணுவின் அடிப்படை துகளான புரோட்டடானும் நியூட்ரானும் இணைந்து நியூக்ளியான்கள்  எனப்படும்.

அணு எண்:
அணுஎண்=புரோட்டான் எண்ணிக்கை=நியுட்ரான் எண்ணிக்கை
நிறைஎண்:
நிறைஎண்=புரோட்டான் எண்ணிக்கை +நியுட்ரான் எண்ணிக்கை 

போர் அணுமாதிரி

போர் அணுமாதிரி:
        அணுவின் நிலைப்புத்தன்மையை நியாயப்படுத்துவதற்காக ரூதர்ஃபோர்டின் அணுமாதிரியில் சில திருத்தம் மேற்க்கொண்டு நீல்ஸ் போர் புதிய அணுமாதிரி கொள்கையை வெளியிட்டார்.


அணுக்கரு கண்டுபிடிப்பு:

தாம்சன் மாதிரி:
      அணுவின் உள்ளே நேர் மின்னோட்ட துகளானது எல்லா பகுதிகளிலும் ஒரே அழுத்தத்துடன் செயல்படும்.அணுவை சீரற்ற நகரும் எலக்ட்ரான்கள் கொண்ட ஒரு சீரான நகரும் நேர்மின் சுமையாக கொண்டால் அந்த துகளானது அணுவின் அடுத்தப் பகுதியிலிருந்து எந்வித விலக்கமும் அடையாமல் வெளியே வரும்.

 
ரூதர்போர்டு ஆல்பா கதிர் சோதனை:

அணு அமைப்பு:

பெருக்கல் விகித விதி:
        A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து  ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் போது A-ன் நிறையானது B-ன் நிறையொடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும். பெருக்கல் விகித விதியானது ஜான் டால்டன் என்பவரால் முன்மொழியப்பட்டது.

தலைகீழ் விகித விதி:
இரண்டு மாறுபட்ட தனிமங்கள் தனித்தனியே ஒரே நிறையுள்ள மாறுபட்ட தனிமத்துடன் சேரும் போது எளிய விகிதத்தில் இருக்கும்.இது ஜெர்மியஸ் ரிச்சர் என்பவரால் முன்மொழியப்பட்டது.
கேலூசக்கின் பருமன் இணைப்பு விதி:
வாயுக்கள் வினைபுரியும் போது அவற்றின் பருமன் அவ்வினையின் பருமனுக்கு எளிய விகிதத்தில் இருக்கும்.


Monday 29 October 2018

மெய்பிம்பம்,மாயபிம்பம்

மெய்பிம்பம்:
        பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால் அதனால் உருவாகும் பிம்பம் மெய்பிம்பம் ஆகும்.
மாயபிம்பம்:
         பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குபின் சந்திக்காமல் செல்லும் போது அதனால் உருவாகும் பிம்பம் மாய பிம்பம்.

முழு அக எதிரொளிப்பு:

முழு அக எதிரொளிப்பிற்கான நிபந்தனைகள்:
      * ஒளியானது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு செல்ல வேண்டும்.
      * அடர்மிகு ஊடகத்தில் படுகோணத்தின் மதிப்பு மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
இயற்கையில் காணப்படும் முழு அக எதிரொளிப்பு:
         * கானல் நீர்
        *  வைரம்
         * விண்மீண்கள்

ஒளியின் திசைவேகம் :

ஓலே ரோமர் என்ற டேனிய வானியலாளர் 1665 ல் வியாழன் கோளின் பன்னிரண்டு  நிலவுகளில் ஒன்றை அவதானித்து அதன் மூலம் ஒளியின் திசைவேகத்தினை கணக்கிட்டார்.
ஒளி விலகலுக்கான காரணங்கள்:
ஊடகத்தின் தன்மையை பொறுத்து ஒளியின் திசைவேகம் மாறுபடுகிறது. அடர் குறை ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாகவும் அடர்மிகு ஊடகத்தில் திசைவேகம் குறைவாகவும் இருக்கும்.

குழி ஆடி:

குழி ஆடி:
      சில வகை கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி உள்பக்கமாக வளைந்திருக்கும்.இவை குழி ஆடி எனப்படும்.

வளைவு ஆடிகள்:

வளைவு  ஆடிகள்:
       பளபளப்பான கரண்டி ஒன்றின் வளைந்த பரப்பு கூட வளைவு ஆடி ஆகும்.
கோளக ஆடி:
       எதிரொளிக்கும் பகுதி கோள வடிவில் காணப்பட்டால் அது கோளக ஆடி எனப்படும்.
வளைவு மையம் :
        கோளக ஆடி எந்த உள்ளீடற்ற கோளத்தின் ஒரு பகுதியாக அமைகிறதோ அதுவே வளைவு மையம் ஆகும்.
ஆடி மையம் :
        கோளக ஆடியின் வடிவியல் மையம் ஆகும்.
முதன்மை அச்சு:
         ஆடி மையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் செங்குத்துக் கோடு ஆகும்.

ஒளி:

ஒளி:
    ஒளி என்பது  ஆற்றலின் வடிவம் ஆகும்.ஒளியின் பண்பையும்,அதன் பயன்பாடுகளையும் பற்றி அறியும் இயற்பியல் பிரிவு ஒளியியல் எனப்படும்.
எதிரொளிப்பு விதி:
     படுகதிர்,எதிரொளிப்புக்கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமைகின்றன. இதையே எதிரொளிப்பு விதிகள் என்பர்.
இடவல மாற்றம்:
       பக்கவாட்டில் ஏற்படும் மாற்றம் இடவல மாற்றம் எனப்படும்.

Sunday 28 October 2018

மைய நோக்கு முடுக்கம், மையநோக்கு விசை,மையவிலக்கு விசை

ஒரு பொருளினுடைய திசைவேகத்தின் எண்மதிப்பு அல்லது திசைஅல்லதுஇரண்டுமே மாறுபட்டால் அப்பொருள் முடுக்கப்படுகிறது. ஆகவே வட்டப்பாதையில் மாறாத கல் ஒன்று  முடுக்கப்பட்ட இயக்கத்தை கொண்டுள்ளது எனலாம்.இங்கு கயிற்றின் வழியே செயல்படும் உள்நோக்கிய முடுக்கமானது கல்லை வட்டப் பாதையில் இயங்க வைக்கிறது. இந்த முடுக்கத்தை மைய நோக்கு முடுக்கம்  என்றும் அதனுடன் தொடர்புடைய விசையை மைய நோக்கு விசை என்கிறோம்.
மைய விலக்கு விசை மைய நோக்கு விசை செயல்படும் திசைக்கு எதிராக இருக்கும். இதன் எண் மதிப்பு மைய நோக்கு விசையின் எண் மதிப்பிற்குச் சமமாக இருக்கும்.






இயக்கச் சமன்பாடுகள்

நியூட்டன் ஒரு பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்து மூன்று  சமன்பாடுகளை வழங்கினார்.

நேர்க்கோட்டு இயக்கத்தின் வரைபடம்:

சீரற்ற இயக்கத்திற்குரிய தொலைவு கால வரைபடம்

வேகம்,திசைவேகம்,முடுக்கம்

வேகம்:
     வேகம் என்பது  தொலைவு மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்தகாலம்  தொலைவு எனலாம்.

திசைவேகம்:
இடப்பெயர்ச்சி மாறுபாட்டு  வீதமே திசைவேகம்.
முடுக்கம்: 
திசைவேக. மாறுபாட்டு வீதம் ஆகும்.

சீரான இயக்கம் மற்றும் சீரற்ற இயக்கம்:

சீரான இயக்கம்:
     ஒரு பொருள் நகரும் போது சமமான தொலைவுகளைச் சமகால இடைவெளிகளில் கடந்தால் அது சீரான இயக்கம் ஆகும்.

சீரற்ற இயக்கம்:
      ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளை கடந்தால் அது சீரற்ற இயக்கம் ஆகும்.

தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி :

தொலைவு :
      திசையைக் கருதாமல் ஒரு நகரும் பொருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவை அப்பொருளின் தொலைவு  எனப்படும்.
    தொலைவின் SI அலகு மீட்டர் ஆகும்.

இடப்பெயர்ச்சி:
       ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும்.
     இடப்பெயர்ச்சியின் SI அலகு மீட்டர்

இயக்கம்

ஓய்வு:
     பொருட்கள் அதன் நிலையிலிருந்து மாறாமல் இருப்பின் அதனை ஓய்வு நிலை என்கிறோம்.
எ.கா: மேசையின் மேல் இருக்கும் புத்தகம்.
இயக்கம்:
       இயக்கம் என்பது ஒரு சார்பியல் நிகழ்வு.பொருட்கள் அதன் நிலையிலிருந்து மாறிக் கொண்டிருப்பின் அது இயக்கம் ஆகும்.
இயக்கத்தின் வகைகள்:
  

Friday 26 October 2018

முடுக்கம்

     ஒரு வினாடியில் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் முடுக்கமாகும்.

முடுக்கம்=திசைவேக மாறுபாடு/எடுத்துக்கொண்ட நேரம்

முடுக்கத்தின் அலகு=மீ/வி^2